' பண்டிதமணி ' கதிரேசன் செட்டியார்-, மறைமலையார் குத்து விட்ட மேஜை !
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் குத்து விட்ட மேஜை !
கிறிஸ்துவ சமயத்தை பரப்ப வந்த பாதிரிகளால் , சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் ' தனித்தமிழ் இயக்கம் '. சமஸ்க்ருதம் கலவாத ' தூய தமிழைப் ' பரப்புவதுதான் அவர்கள் நோக்கம் .
இது , ஒரு சதித்திட்டம் என்று தெரியாத பலரும் இன்றும் , இதற்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஆதரவு நல்குவது , ஒரு துரதிருஷ்டம் என்றே எண்ண வேண்டியுள்ளது .
அடுத்து மறைமலை அடிகளார் : சுவாமி வேதாசலம் என்ற இயற்பெயர் கொண்ட ' மறைமலை அடிகள் ' ஒரு சைவ சித்தாந்த அறிஞர் , தனித்தமிழ் இயக்கத்தின் சென்ற நூற்றாண்டின் முன்னோடி என்று புகழ் பெற்றவர் . சமஸ்க்ரிதம் கலவாத தூய தமிழில் அனைத்தயும்எழுதவும் , பேசவும் இயக்கங்கள் நடத்தி வந்தார் .
தஞ்சை அருகே உள்ள கரந்தை என்ற இடத்தில் உள்ள ஒரு விழாவில் , பண்டிதமணியும் , மறைமலை அடிகளாரும் கலந்து கொண்டார்கள்.
மறைமலையார் பேசும்போது,‘சங்க நூல்கள் எல்லாம் தனித் தமிழ் நூல்கள்; அவை ஸம்ஸ்க்ருதக் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார். பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக, ‘கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார்.
மறைமலையார் அடங்குவதாக இல்லை. தேவார, திருவாசகங்கள் தனித் தமிழில் ஆக்கப்பட்டதென்று கூறினார்.
உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் முதல் பதிகத்தில் ‘சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் ஸ்ம்ஸ்க்ருதச் சொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார்.
அடிகளாருக்குக் கோபம் வந்து விட்டது; கோபமாக மேஜையைக் குத்தினார்.
‘எனக்கும் ஒரு மேஜை போட்டிருந்தால், இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்’ என்றார் பண்டிதமணி.
பண்டிதமணி மேற்கோள் காட்டிய , நமது ஆச்சரியாரான ஸ்ரீ திருநாவுகரசு நாயனார் அருளிச்செய்த ' திருவதிகை ' தலப்பதிகம் இதோ
பண் :கொல்லி
பாடல் எண் : 6
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
பொழிப்புரை :
அதிகை ... அம்மானே! இறந்தவர் மண்டை யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும் துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.
குறிப்புரை :
திருவதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே! நீரும் மலரும் புகையும் (பிறவும்) கொண்டு நின்னை வழிபடுவதை மறந்தறியேன். தமிழ் மொழியில் அமைந்த நின்புகழோடு இசை பாடுதலை மறந்தறியேன். நன்கிலும் தீங்கிலும் உன்னை மறந்தறியேன். உன் திருப்பெயரை என் (புல்லிய) நாவில் வைத்துச் சொல்லுதலை மறந்தறியேன். இறந்த நான்முகனார் தலையிலே பிச்சையேற்றுக் கொண்டு திரிபவனே! (அடியேன்) உடலின் உள்ளே மிக்கு வருத்தும் சூலை நோயைத் தீர்த்தருள்வாய். அடியேன் வருந்துகின்றேன்.
சலம் - ஜலம். `பூவொடுதூபம்` `தமிழோடிசை` என்பன முறையே அருச்சனையிலும் தோத்திரத்திலும் உள்ளனவாய் உடனிகழ்வன ஆதலின், முதலடிக்கண் வந்த மூன்றனுருபு உடனிகழ்ச்சிப் பொருளவாயின. இருவினையும் பற்றி விளையும் இன்பத் துன்பங்களை நலம் (நன்கு) தீங்கு என்றருளினார். `உன்`, `என்` என்பவற்றின்கண் முறையே இறைமையாகிய மேலுக்கும் அடிமையாகிய கீழுக்கும் உள்ள வரம்பு ஒலித்தல் காண்க.
`மேலுக்கு நீவரம்பாயினை ... ... கீழுக்கு நான் வரம்பாயினேன்`. (சிவஞான பாலைய - கலம்பகம் 90) உலந்தார் - இறந்தவர்; வாழ்நாள் கடந்தவர். `உக்கார் தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும் புக்கார்`(தி.4 ப.16. பா.4). `மாண்டார் தம் என்பும்` (தி.4 ப.16 பா.9) என்றதில் உள்ள வரலாறு வேறு.
உடல் வயிற்றைக் குறித்ததுமாம். அலந்தேன் - ஈண்டு நிகழ்வு உணர்த்திற்று. மறந்திருந்த குற்றமும் அதற்குக் காரணமும் பழம் பிறவிகளின் நிகழ்ச்சி. அதனை
`ஏழை மாரிடம் நின்று இரு கைக்கொடுஉண்
கோழை மாரொடும் கூடிய குற்றமாம்
கூழைபாய் வயற் கோழம் பத்தானடி
ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே` (தி.5 ப.65 பா.
என்னும் திருக்குறுந்தொகையால் அறியலாம்.
I am tagging this with Jeeva Nanthan so that he can quote another interesting incident of Comrade . Jeeva with Adiklar.
பண்டிதமணி அவர்கள் , கோவை. . பெரியபுராண உரை ஆசிரியர் ' சிவக்கவிமணி ' CKS அவர்களுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதங்கள் PHOTO IMAGE இதோடு சேர்த்தி உள்ளேன்
Letter Courtesy : ' சேக்கிழார் நிலையம் ', கோவை
Poem & Urai Coutersy : DHARMAPURAM ADHEENAM website - Internet Sources



Comments
Post a Comment