சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--அக்னி ருத்ரனே! அ.பத்மாவதி
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--அக்னி ருத்ரனே! அ.பத்மாவதி முசுகுந்தன் என்ற சோழ மன்னனுக்கு அசுரர்களால் ஏற்படும் இடையூற்றை ஒழிப்பதற்காக இந்திரனின் ஏவல்படி தேவருலகினின்றும் புகார் நகரம் வந்து அங்குள்ள சதுக்கத்தில் தங்கியிருந்த பூதமே சதுக்கப் பூதமாகும். https://groups.google.com/g/vallamai/c/Z0pLWcqD8SI இப்பூதத்தை இந்திரன் முசுகுந்த சோழனுக்கு அளித்ததற்குக் காரணம், ஒரு சமயம் இந்திரன் அசுரர்களோடு போர் புரியச் சென்றிருந்த போது அவன் பொருட்டு அமராவதி நகரைக்காவல் காத்தவன் முசுகுந்த சோழன். அதற்குக் கைம்மாறாக வெற்றிவேல் மன்னற்கு உற்றதை ஒழிக்கென தேவர் கோமான் இந்திரன் பூதத்திற்கு ஏவலிட்டான் என்று கூறப்படுகிறது. மருவூர்ப் பாக்கத்தையும் பட்டினப் பாக்கத்தையும் சேர்ந்த வீரர்கள், நாட்டில் வசியும் வளனும் சுரக்கவேண்டும் என்றும், வெந்திறல் மன்னவற்கு நேரும் துன்பங்களை ஒழிக்க வேண்டும் என்றும், கரிகால் சோழன் வடநாடு நோக்கிப் படை எடுத்துச் சென்ற போது அப்பூதத்தின் முன்னுள்ள முழுப்பலி பீடிகையில் தங்கள் தலையை அறுத்து வைத்து வேண்டினர் என்கிறது சிலப்பதிகாரம். புலிக்கணம் போன்ற வீரர்கள் கொட...
Comments
Post a Comment