ஜோசியர் ஆணைப்படி குலதெய்வக் கோவில் கும்பாபிஷேகம் செய்து ஸ்டாலினை முதல்வர் ஆக்கிய துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின் குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்: அழைக்காமல் ஆஜரான அமைச்சர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு புதிதாக கோயில் கொடிமரம் விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழப்பெரும்பள்ளம் பிரசித்திபெற்ற கேது தலம்.

இங்குள்ள தனது தந்தை வழி குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோயிலை சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கருங்கல் திருப்பணி செய்த துர்கா ஸ்டாலின், அதன் குடமுழுக்கு விழாவை இன்று நடத்தினார்.

பிள்ளையார்பட்டி  கற்பக விநாயகர் கோயில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட கடங்களில் இருந்த புனித நீரை விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இதற்காக கடந்த நான்கு நாட்களாக இங்கேயே தங்கி இருக்கிறார்  மனைவி  துர்கா ஸ்டாலின். தங்கள் தலைவரின் துணைவியார் இங்கே இருக்கும்போது நாம் போகாமல் இருந்தால் சரியாக இருக்காது என நினைத்த திமுக விஐபி-க்கள் பலரும் கீழ்ப்பெரும்பள்ளத்துக்கு விசிட் அடித்து துர்காவிடம் ஆஜர் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள்.

தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், நடிகர்  சந்திரசேகர் மற்றும் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மெய்யநாதன், சேகர்பாபு, மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூம்புகார் நிவேதா. முருகன், சீர்காழி பன்னீர்செல்வம், டி.ஆர்.பி. ராஜா, முத்துராஜா மற்றும் திமுக நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் என பலரும் பக்தர்களுடன் கோயிலுக்கு வெளியில் நின்று கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தவர்கள், அழைக்காமலேயே வந்து துர்காவிடம் ஆஜர் கொடுத்துவிட்டுப் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி : க. சண்முகவடிவேல்

Thanks to Sri. Vedam Vedaprakash for his Paper cuttings - got via Facebook

Comments

Popular posts from this blog

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூறும் சதுக்க பூதம்--அக்னி ருத்ரனே! அ.பத்மாவதி