துர்கா ஸ்டாலின் குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்: அழைக்காமல் ஆஜரான அமைச்சர்கள் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு புதிதாக கோயில் கொடிமரம் விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. Written by WebDesk September 6, 2022 07:51 IST Follow Us மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சியில் இக்கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு புதிதாக கோயில் கொடிமரம் விநாயகர், ராகு, கேது, பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழப்பெரும்பள்ளம் பிரசித்திபெற்ற கேது தலம். இங்குள்ள தனது தந்தை வழி குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோயிலை சுமார் 4 கோடி ரூபாய...